Goldstars News
பிரதான செய்திகள்

எலான் மஸ்க் அறிவிப்பு டெஸ்லாவில் மனித ரோபோ

news-image

நியூயார்க்: டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்தார். உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான எலான் மஸ்க், `ரோபோக்கள் மீது அதிகளவு நம்பிக்கை வைத்ததன் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. சில குறிப்பிட்ட வேலைகளுக்கு ரோபோக்களை விட மனிதர்களே சிறந்தவர்கள்’ என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், தனது டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையில் `டெஸ்லா பாட்ஸ்’ என்ற மனித ரோபோக்களை ஆயிரக்கணக்கில் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெஸ்லாவில் பல்வேறு ஆலோசனை, பரிந்துரை கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வகை மனித ரோபோக்கள் வரும் 30ம் தேதி செயற்கை நுண்ணறிவு நாளன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சக்திவாய்ந்த ரோபோக்கள் அடுத்தாண்டு முதல் உற்பத்தி பிரிவில் பயன்படுத்தப்பட இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். அதே நேரம், மனித ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் வெற்றி பெறுமா என ரோபோட் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.