Goldstars News
பிரதான செய்திகள்

இந்த வாரம் பொது வாக்கெடுப்பு: உக்ரைனின் 2 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு

news-image

கீவ்: உக்ரைனில் உள்ள 2 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை இந்த வார இறுதியில் நடத்த கிளர்ச்சிப் படை தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது 6 மாதங்ளுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளின் பிரிவினைவாத தலைவர்கள், இந்த வார இறுதியில் இந்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு வெற்றி அடைந்தால், இந்த 2 பகுதிகளும் ரஷ்யாவுடன் இனைக்கப்படும். ஆனால், மேற்கத்திய நாடுகள் இதை அங்கீகரிக்குமா என்பது கேள்விக்குறிதான். சமீப நாட்களாக போரில் ஆதிக்கம் செலுத்தி வரும் உக்ரைன், ரஷ்யா கைப்பற்றிய பெரும் பகுதிகளை மீட்டு உள்ளது. மேலும், உக்ரைனின் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ரஷ்யா தனது எல்லை வரை பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வாக்கெடுப்பு நடத்தினால் மீண்டும் மோதல் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.