Goldstars News
பிரதான செய்திகள்

3 டி.20 போட்டிகளில் ஆட ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது

news-image

மொகாலி: உலக கோப்பை டி.20 தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. முதல் டி.,20 போட்டி மொகாலியில் வரும் 20ம்தேதி, 2வது போட்டி நாக்பூரில் 23ம்தேதி, கடைசி போட்டி ஐதராபாத்தில் 25ம் தேதியும் நடக்கிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காரணமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ் விலகிய நிலையில் நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ், சீன் அபோட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அணியில் சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சிட்னியில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்ட ஆஸ்திரேலிய அணி பிற்பகலில் இந்தியா வந்து சேர்ந்தது. இன்று ஒருநாள் ஓய்வுக்கு பின் நாளை அவர்கள் மொகாலியில் பயிற்சியை தொடங்க உள்ளனர். இந்திய வீரர்கள் நாளை மொகாலியில் ஒன்று கூடுகின்றனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, ஹர்சல்பட்டேலும் அணியுடன் இணைகின்றனர்.