Goldstars News
பிரதான செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதி..!!

news-image

டோக்கியோ: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது. 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில், உலக சாம்பியன்கள் கோபயாஷி, ஹாக்கி இணையை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது. அவர்கள் கோபயாஷியை 24-22 15-21 21-14 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வாங்குகிறது. காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய ஜோடிக்கு பதக்கம் உறுதியானது. மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தோனேசியாவின் ஹென்ட்ரா செட்டிவா மற்றும் முகமது அஹ்சன் ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை, 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.