Goldstars News
பிரதான செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது

news-image

பெல்ஃபாஸ்ட்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் விளையாடியது.  முதல் 4 போட்டி முடிவில்  2-2 சமனில் இருக்க கடைசி போட்டி நேற்று நடந்தது. முதலில்  பேட்டிங் செய்த  ஆப்கன் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன் எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன் எடுத்தார்.

பின்னர் மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த்லீவிஸ் விதிப்படி 7 ஓவரில் 56 இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 6.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 3-2 என தொடரை கைப்பற்றியது.