Goldstars News
பிரதான செய்திகள்

பெலோசியின் ஆசிய பயணம் உறுதியானது

news-image

பீஜிங்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி, சர்ச்சைக்குரிய தைவானுக்கு செல்வதாக  சமீபத்தில் அறிவித்தார். இதற்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து, `தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது,’ என்று எச்சரித்தார். இந்நிலையில், பெலோசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `பல்வேறு விவாகரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் தைவானுக்கு அவர் செல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதால் பதற்றம் நிலவுகிறது.