Goldstars News
பிரதான செய்திகள்

பாகிஸ்தானை உலுக்கும் தீவிரவாத தாக்குதல்கள்: 6 மாதத்தில் 323 வீரர்கள் படுகொலை

news-image

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 6 மாதங்களில் 434 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 323 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்காக, பல்வேறு தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. தனது நாட்டில் புகலிடம் அமைத்து, நிதியுதவி, ஆயுத பயிற்சி அளித்து காஷ்மீருக்குள் அனுப்புகிறது. தற்போது, தன் வினை தன்னையே சுடும் என்பது போல், பாகிஸ்தானுக்கு இதே தீவிரவாத அமைப்புகளால் அதற்கு தலைவலி அதிகமாகி இருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில், ‘கைபர் பக்துன்க்வா மாகாணம் பாதுகாப்புப் படையினர் மீது அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 247 தாக்குதல்கள் நடந்துள்ளது. பலுசிஸ்தானில் 171 தீவிரவாத தாக்குதல்களும், சிந்துவில் 12 தாக்குதல்களும் நடந்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப்பில் ஒன்று, இஸ்லாமாபாத்தில் 3 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. மொத்தம் 6 மாதங்களில் 434 தாக்குதல்கள் நடந்துள்ளன. தீவிரவாத தாக்குதல்களில் குறைந்தது 323 பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 718 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.