Goldstars News
பிரதான செய்திகள்

சீன ராணுவத்துக்கு நம்பகமான தளபதி: ஜின்பிங் திடீர் விருப்பம்

news-image

பீஜிங்: சீன ராணுவம் நிறுவப்பட்டதின் 95வது ஆண்டு விழா நாளை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு ராணுவ உத்திகளை வலுப்படுத்துவது குறித்து கடந்த வியாழன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிபர் ஜீ ஜின்பிங் பேசுகையில், ‘தேசிய பாதுகாப்பில் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சீனா எதிர்கொண்டு வருகின்றது. உலகின் மிகப் பெரிய ராணுவமான சீன ராணுவத்துக்கு நல்ல தலைமை இருக்க வேண்டும். அவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமானவராகவும், நம்பகமான மக்கள் சீன ராணுவத்தை திறமையாக வழி நடத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.