Goldstars News
பிரதான செய்திகள்

இங்கி.யை வாட்டும் 10 மடங்கு வெயில்

news-image

புதுடெல்லி: இங்கிலாந்தில் கடந்த 18,19 தேதிகளில் எப்போதும் இல்லாத வகையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு முன், 2019ம் ஆண்டு 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் கென்ட் முதல் நார்த் யார்க்க்ஷையர் வரை உள்ள 46 வானிலை ஆய்வு மையங்களிலும் வெப்பநிலை முன்பு எப்போதையும் விட நேற்று அதிகமாக பதிவானது.

இதில்,  ஸ்காட்லாந்து வரலாற்றில் முதல்முறையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு முன்னர், இங்கு 2009ம் ஆண்டு 32.9 டிகிரி செல்சியஸ் பதிவானதே அதிகபட்சமாகும். பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே, இங்கிலாந்தில் கடந்த வாரம் வெப்பம் 10 மடங்கு அதிகரித்து உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.