Goldstars News
பிரதான செய்திகள்

உக்ரைனில் சிறை மீது ஏவுகணை தாககுதல் 50 வீரர் பலி

news-image

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, 5 மாதங்களாகி விட்டது. இருப்பினும், போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிய போது சரணடைந்த உக்ரைன் வீரர்கள் அடைக்கப்பட்டுள்ள ஓலெனிவ்கா சிறை டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளது. இதன் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கைதிகளாக இருந்த 53 உக்ரைன் வீரர்கள் பலியானதாகவும், 75 வீரர்கள் காயமடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்தது. ஆனால், தானே தாக்குதல் நடத்தி விட்டு அது நாடகமாடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் போரினால் நிறுத்தப்பட்டு இருந்த தானிய ஏற்றுமதி, 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று தொடங்கியது. ஓடேசாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து துருக்கிக்கு உணவு தானியம் ஏற்றிய முதல் கப்பல் நேற்று புறப்பட்டது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சென்று பார்வையிட்டார்.