Goldstars News

ரூ.3.3 லட்சம் கோடி விலை டிவிட்டர் விற்பனைக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்: மஸ்கின் முதல் நிபந்தனை ஓகே

news-image

நியூயார்க்: எலான் மஸ்க் கேட்டபடி ரூ.3.3 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை விற்க அதன் பங்குதாரர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.3 லட்சம் கோடியில் வாங்க விருப்பம் தெரிவித்தார். இதற்கு டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனாலும், டிவிட்டரை வாங்குவதில் மஸ்க் 3 முக்கிய சந்தேகத்தை எழுப்பினார். டிவிட்டரில் 5%க்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளன என்பதை நிர்வாகம் நிரூபிக்க வேண்டும், பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வேண்டும், கடன் விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இவைதான் தீர்க்கப்படாத விஷயங்கள்.
இந்நிலையில், மஸ்க் கேட்டபடி ரூ.3.3 லட்சம் கோடியில் டிவிட்டரை விற்க அதன் பங்குதாரர்கள் ஒருமனதாக நேற்று ஒப்புதல் தெரிவித்தனர். இதன் மூலம், மஸ்க்கின் ஒரு கோரிக்கை நிறைவேறி உள்ளது. அதே சமயம், மஸ்க் மாறி மாறி பேசி வருவதால் டிவிட்டரின் பங்குகள் தொடர்ந்து சரிகின்றன. தற்போது, மஸ்க் கேட்ட தொகையை விட மிகக் குறைவான விலையில் டிவிட்டர் பங்குகள் இருப்பதால் இந்த விற்பனை நடக்குமா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.