Goldstars News

வங்க தேசத்துக்கு எதிராக வெ.இண்டீஸ் அபார வெற்றி

news-image

நார்த் சவுண்டு: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 16ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில்   வங்கதேசம்  103 ரன்னில்  சுருள,  வெ.இண்டீஸ் 265ரன் எடுத்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் 245ரன்னில் ஆட்டமிழந்தது. அதனால் 84ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 49ரன் எடுத்திருந்து.

அதனால் வெ.இண்டீஸ் 4வது நாளான  நேற்று   35 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தது.  ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் களத்தில்   இருந்த  ஜான் கேம்பெல் 58*,   ஜெர்மைன் பிளாக் வுட் 26* ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டினர். அதனால் இன்னும் ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் வெ.இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 88ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் 2 ஆட்டங்களை கொண்ட தொடரில் வெ.இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த 2 அணிகளுக்கு  இடையிலான 2வது டெஸ்ட்  ஜூன் 24ம் தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.