Goldstars News

மாக்கியை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா எதிர்ப்பு: இந்தியாவின் முயற்சிக்கு தடை

news-image

ஐ.நா. சபை: மும்பை தாக்குதல் தீவிரவாதியின் உறவினரான மாக்கியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சியை சீனா தடுத்துள்ளது. மும்பை தாக்குதல் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்தின் உறவினரான மாக்கி என்ற அப்துல் ரஹ்மான் அமெரிக்காவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதால், அமெரிக்கா அவரை தீவிரவாதியாக அறிவித்தது. லஷ்கர் உள்ளிட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளில் மாக்கி முக்கிய பொறுப்புகளில் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மாக்கியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான கூட்டு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்துள்ளன. ஆனால், பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா, இந்த தீர்மானத்தை ஏற்க விடாமல் தடுத்து முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சீனா இது போல் நடந்து கொள்வது முதல் முறையல்ல. கடந்த 2019 மற்றும் 2009ம் ஆண்டுகளில் தனிப்பட்ட முறையிலும், மீண்டும் 2016ம் ஆண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய பி-3 நாடுகளுடனும் இணைந்து ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முடிவு எடுத்த போதும், சீனா தடையாக இருந்தது.