Goldstars News

இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவுக்கு 4 மாதங்கள் தடை விதித்தது ஐக்கிய அரபு அமீரகம்..!!

news-image

அபுதாபி: இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 4 மாதங்கள் தடை விதித்தது. மே 13ம் தேதி முன்தேதியிட்டு இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தகவல் தெரிவித்துள்ளது. கோதுமை தானியம், கோதுமை மாவு இரண்டுக்கும் தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.