Goldstars News

திபெத்தில் கோளரங்கம் கட்டும் சீனா

news-image

பெய்ஜிங்: உலகின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் மிக உயரமான இடத்தில் சீனா கோளரங்கம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த கோளரங்கம் வரும் 2024ம் ஆண்டு முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தை ஆராய்வதை நோக்கமாக கொண்டே சீனா இந்த கோளரங்கத்தை திறப்பதாக கூறப்படுகின்றது. கோளரங்கம் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட லென்ஸ் உடன் மிகப்பெரிய கண்ணாடி வானியல் தொலைநோக்கியை கொண்டிருக்கும். இது, வானியல் ஆராய்ச்சி மற்றும் பொதுஅறிவியல் கல்விக்கான முக்கிய தளமாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.