Goldstars News

யோகாவில் சிறுமி உலக சாதனை

news-image

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த தம்பதி சத்யராஜ்-நர்மதா. இவர்களின் மகள் ஜானவி (7). இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், யோகா பயிற்சிகளை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை உலக சாதனைக்காக சிறுமி ஜானவியின் பல்வேறு யோகாசனங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜானவி உடலை வில்லாக வளைத்து, ஒரு நிமி டத்தில் 30 முறை தனுராசனத்தில் இருந்து கண்டபேருண்டாசனத்துக்கு உடனுக்குடன் மாறியதன் மூலம் உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனையை பாராட்டி, வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் உலக சாதனை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் என்ற 3 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. யோகாசனத்தில் உலக சாதனை படைத்த சிறுமி ஜானவிக்கும், அவரது பயிற்சியாளர் சந்தியாவுக்கும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.