Goldstars News

ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ?- வெளிப்படையாக பேசிய டோனி

news-image

மும்பை,

 ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின .முதலில் பேட்டிங் செய்த சென்னை 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது .இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

 

இதனால் சென்னை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் வெற்றி ,8ல் தோல்வி என பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது .

 

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது ;

விக்கெட் எப்படி இருந்தாலும், 130 ரன்களுக்கு கீழே உள்ள ஸ்கோரை கட்டுப்படுத்துவது மிக கடினம்.எங்கள் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் நன்றாகப் பந்துவீசினார்கள், நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் தங்களைத் தாங்களே நம்புவதற்கு இது போன்ற ஒரு விளையாட்டு அவர்களுக்கு உதவுவதாக  நம்புகிறேன் .

, மேலும் சில பேட்ஸ்மன்கள் நல்ல பந்துகளில் ஆட்டமிழந்தனர் .அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார் .