Goldstars News

இத்தாலி சர்வதேச டென்னிஸ் அசரென்கா முதல் வெற்றி

news-image

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் போட்டி  ரோம் நகரில் நடக்கிறது. அதன் மகளிர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கின. பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (32வயது, 16வது ரேங்க்) தனது முதல் சுற்றில்  சுவிட்சர்லாந்தின் விக்டோரியா கொலுபிச்சுடன் (29 வயது, 56வது ரேங்க்) மோதினார். இதில் அபாரமாக விளையாடிய அசரென்கா 6-3, 6-0 என நேர் செட்களில் வென்று 2வது  சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), டாரியா கசட்கினா (ரஷ்யா), ஷுவாய் ஸாங் (சீனா), பெத்ரா மார்டிச் (குரோஷியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.