Goldstars News
பிரதான செய்திகள்

இலங்கை வன்முறை - ஐ.நா. கண்டனம்

news-image

கொழும்பு,

பல மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி, இலங்கையின் அரசியலிலும் எதிரொலித்தது. இந்த இடர்பாட்டில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாத அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்களும் தன்னெழுச்சியாக போராட தொடங்கினர். குறிப்பாக தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடந்த மாதம் 9-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அங்கேயே கூடாரம் அமைத்து போராட்ட கிராமமாக உருவாக்கியுள்ள அவர்கள், நாளுக்கு நாள் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர். நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கிடையே, இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். 

ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தநிலையில்,  இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு  ஐ.நா. மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். 

மேலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.