Goldstars News
பிரதான செய்திகள்

கனடா பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோ பைடன்: உக்ரைன் விவகாரம் குறித்து உரையாடல்

news-image

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் உட்பட பல்வேறு உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு மேலும் பாதுகாப்பு உதவிகள் வழங்குவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் உரையாடியதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. 

மேலும், வரும் ஜூன் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடைபெற இருக்கும் அமெரிக்காவின் உச்சி மாநாட்டில் இருவரும் கலந்துகொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.