Goldstars News
பிரதான செய்திகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்து நிதான ஆட்டம்: ஜோ ரூட் சதம் விளாசினார்

news-image

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய 4வது ஓவரில் தொடக்க ஆட்டக்கார் ஜாக் கிரெவ்லியை  டக் அவுட்டாக்கினார்  சீல்ஸ். சமாளித்து களத்தில் இருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர்  அலெக் லீஸ் 30ரன் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ செய்தார் வீராசாமி பெருமாள். அதன் பிறகு  சுதாரித்த கேப்டன் ஜோ ரூட், டேனியர் லாரன்ஸ் இணை நிதானமாக விளையாட ஆரம்பித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரை சதத்தை கடந்தனர். இருவரையும் பிரிக்க வெ.இண்டீஸ் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ரூட் சதத்தை கடக்க, லாரன்ஸ் சதத்தை நெருங்கினார். முதல் நாள் ஆட்டம் முடிய இருந்த நிலையில்  90வது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை தூக்கி அடிக்க முயன்ற லாரன் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 90ரன் எடுத்திருந்தார். அத்துடன் வெளிச்சன்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 89.5ஒவருக்கு 3 விக்கெட்களை மட்டும் இழந்து 244ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 119* ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2வது நாளான நேற்று இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.