Goldstars News
பிரதான செய்திகள்

உலகளவில் மேலும் 23.67 லட்சம் பேருக்கு கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 30 கோடியை தாண்டியது: அமெரிக்காவில் உச்சம்!!

news-image

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.74 கோடியை தாண்டி பதிவாகி உள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,06,08,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,74,75,429 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 89 ஆயிரத்து 288 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 3,76,44,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,859 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 5,95,04,107, உயிரிழப்பு -  8,55,649, குணமடைந்தோர் - 4,20,83,056
இந்தியா  -    பாதிப்பு -  3,52,23,770, உயிரிழப்பு -  4,82,911, குணமடைந்தோர் - 3,43,59,227
பிரேசில்   -    பாதிப்பு -  2,23,95,322, உயிரிழப்பு -  6,19,730, குணமடைந்தோர் - 2,15,67,845
இங்கிலாந்து- பாதிப்பு - 1,40,15,065, உயிரிழப்பு - 1,49,515, குணமடைந்தோர் - 1,06,20,728
பிரான்ஸ்      - பாதிப்பு -  1,11,83,238, உயிரிழப்பு - 1,25,013, குணமடைந்தோர் - 83,94,031

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா - 1,06,01,300
துருக்கி - 97,87,274
ஜெர்மனி - 73,99,003
இத்தாலி - 69,75,465
ஸ்பெயின் - 69,22,466
ஈரான்  -  62,03,046
அர்ஜெண்டினா - 60,25,303
கொலம்பியா - 52,42,672
இந்தோனேசியா - 42,64,669
போலந்து - 41,79,292