Goldstars News
பிரதான செய்திகள்

அமெரிக்காவில் ஒரு நாள் பாதிப்பு 5.57 லட்சத்தை தாண்டியது!! - உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு 21 லட்சமாக உயர்வு ..

news-image

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29.54 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 39 லட்சத்து 26 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 லட்சத்து 72 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்துள்ளனர்.

*அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,57,425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,825 பேர் உயிரிழந்துள்ளனர்.

*அமெரிக்காவை தொடர்ந்து பிரான்சில் 271,686 பேருக்கும் இங்கிலாந்தில் 218,724 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*இத்தாலியில் 170,844 பேருக்கும் ஸ்பெயினில் 117,775 பேருக்கும் அர்ஜென்டினாவில் 81,210 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8-வது இடத்தில் இருக்கிறது.