Goldstars News

வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரம் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கானில் 100 பேர் சிதறி பலி

news-image

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின், ஆட்சியை பிடித்துள்ள தலிபான் தீவிரவாத ்அமைப்பு, அங்கு இடைக்கால இஸ்லாமிய அமீரக அரசை நிறுவியுள்ளனர். இவர்கள் ஆட்சி அமைத்த பிறகு ஷியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், குண்டூஸ் மாகாணத்தின் பண்டார் கான் அபாத் மாவட்டத்தில் உள்ள கோஜார் இ சயீத் அபாத் மசூதியில், ஷியா முஸ்லிம்கள் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது, மசூதியில் பயங்கர சத்ததுடன் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில், 100 பேரை வரை உடல் சிதறி பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இங்கு ஷியா முஸ்லிம்கள் மீது ஐஎஸ் அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் மீது சந்தகேம் ஏற்பட்டுள்ளது.