Goldstars News

போப் பிரான்சிஸ் வேதனை - சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

news-image

வாடிகன்: பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க சர்ச்சுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்தார். பிரான்சில் உள்ள கத்தோலிக்க சர்ச்சுகளில் சிறுவர்களுக்கு எதிராக பதிவான பாலியல் குற்றங்கள் தொடர்பான விவரங்களை கடந்த 2018ம் ஆண்டு சேகரிக்க தொடங்கியது. இந்த விசாரணை குழு தனது 2,500 பக்க அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், கடந்த 70 ஆண்டுகளில் 3.30 லட்சம் சிறுவர்கள் கத்தோலிக்க மையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் 3,000 பாதிரியார்களும் அடக்கம்.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: துரதிர்ஷ்டவசமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். கத்தோலிக்க தலைமையகத்தின் பணிச் சுமையால் நீண்ட காலமாக அவர்கள் மீது கவனம் கொள்ளாததால் ஏற்பட்ட அவமானம் இது. தேவாலயங்கள் இனிமேல் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தலைமை குருக்கள், ஆயர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.