Goldstars News
பிரதான செய்திகள்

அமெரிக்க எம்.பி., கோரிக்கை - இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசி

news-image

வாஷிங்டன்: ''இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த 75 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போதாது; கூடுதலாக வழங்க வேண்டும்,'' என, அந்நாட்டு எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

'கொரோனா சவாலை சமாளிக்க இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:இந்தியாவுக்கு அமெரிக்கா 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளது; இது போதாது. கூடுதலாக வழங்க வேண்டும். அமெரிக்கா உலகளவில் தடுப்பூசி திட்டத்திற்கு உதவுவதற்கான மசோதாவுக்கு 116 எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளவில் உருவாகும் உருமாறிய புதிய கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, வினியோகிப்பது, தொற்று நோய் பரவலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.