Goldstars News
பிரதான செய்திகள்

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு - இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை டெல்டா

news-image

புதுடில்லி: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617.2 கொரோனா வகை 'டெல்டா' கொரோனா வகை என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வகைக்கும் பெயரிட்டுள்ளது.

உலகநாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயரிட்டு அழைத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனாவை ' டெல்டா' எனவும், பிரிட்டனில் 2020 செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா 'ஆல்பா' ( 'Alpha') என்றும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா ('Beta') எனவும், பிரேசிலில் 2020 நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா ( 'Gamma') எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 'Epsilon' எனவும் பெயரிட்டுள்ளது.