Goldstars News

விண்வெளியில் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையம் : 2030க்குள் அமைக்க ரஷ்யா முடிவு - அமெரிக்காவுடன் மனக்கசப்பு

news-image

மாஸ்கோ: விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்பை வழங்கி வந்த ரஷ்யா, வரும் 2025ம் ஆண்டு இதில் இருந்து வெளியேறுவதாக கடந்த வாரம் அறிவித்தது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் தனது நாட்டுக்கு என தனியாக புதிய விண்வெளி மையத்தை அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. அமெரிக்கா -  ரஷ்யா இடையே கசப்பான உறவு நீடித்து வரும் நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.