Goldstars News
பிரதான செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.84 கோடியை தாண்டியது ! - தவறாமல் அணிவோம்; தரம்வாய்ந்த முகக்கவசம்

news-image

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.60 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.84 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.606 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 32,875,045 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 586,611 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

பிரேசிலில் தொடர்ந்து அதிக உயிழப்பு வருகிறது. 14,370,456 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் மட்டும் 392,204 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்தியாவில் மட்டும் உச்சபட்ச அளவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 148,472,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.