Goldstars News

கொரோனா தடுப்பு பணி விவேக் மூர்த்திக்கு பாராட்டு

news-image

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், பல முக்கிய பதவிகளில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டின், 'சர்ஜன் ஜெனரல்' ஆக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே கொரோனா பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து விட்டனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது:கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நம் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி, நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கிறார்; அவருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.