Goldstars News

தைவானில் பயங்கர ரயில் விபத்து; 48 பேர் பலி, 100 பேர் காயம்

news-image

தைபே: தைவானில், ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 48 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்துள்ளனர்.

கிழக்காசிய நாடான, தைவானின் தலைநகர் தைபேயில் உள்ள ஹூலியன் என்ற பகுதியில், மலை வழிச் சாலையை உபயோகிக்க தயங்கும் மக்களுக்கு வசதியாக, ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த ரயில் வழித் தடத்தில், நேற்று காலை, 490 பயணியருடன், 'டொரோக்கோ - 408' என்ற மலை ரயில் சென்றது. அப்போது, கட்டுமான பணிகளுக்கான பொருட்களை ஏற்றி வந்த லாரி, மலைச் சரிவில் சரிந்து, ரயில் மீது வேகமாக மோதியது.

இதில் அந்த ரயில், சுரங்கப் பாதைக்குள் செல்லும்போது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில், 48 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 100க்கும் மேற்பட்டோர், காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களில் பலரது நிலை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

ரயிலின் சிறிய பகுதி மட்டுமே சுரங்கத்தின் வெளியே உள்ளது. சுரங்கத்திற்குள் தடம்புரண்டு இருக்கும் மீதமுள்ள ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.விபத்து நடந்த பகுதி யில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், 'வீடியோ'க்களும், தைவான் நாட்டின் தொலைக்காட்சி 'சேனல்' களில் வெளியிடப்பட்டு வருகின்றன