Goldstars News

போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்டர்நெட் சேவை முடக்கம்

news-image

யாங்கூன்: மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி திடீரென ஜனநாயக ரீதியிலான அரசு கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கடந்த 2 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது வரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்டர்நெட் சேவைகள் முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை பிராட் பேண்ட் இணைய ேசவை முடக்கப்படுகிறது. பைபர் கேபிள் மூலமான லேண்ட் லைன் இணைப்புக்கள் வேகம் குறைக்கப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன,’ என கூறப்பட்டுள்ளது.