Goldstars News

இந்திய சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்யும் பாக்.,

news-image

இஸ்லாமாபாத்,:இந்தியாவில் இருந்து, சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்ய உள்ளதாக, பாக்., நிதி அமைச்சர் ஹம்மத் அசார், கூறினார்.

அண்டை நாடான பாகிஸ்தான், நம் நாட்டில்இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு, இரு ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. இந்நிலையில், தடையை நீக்கியுள்ள பாக்., நம் நாட்டில் இருந்து, சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது

இது குறித்து, பாக்., நிதி அமைச்சர் ஹம்மத் அசார் நேற்று கூறியதாவது:எங்கள் நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு, இந்தியாவில் இருந்து, ஐந்து லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில், மிக மலிவானவிலைக்கு சர்க்கரை கிடைப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எங்கள் வர்த்தக அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், வரும் ஜூன் முதல், இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யவும் தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.