Goldstars News

டெக்சாசில் துவக்க பள்ளிக்கு இந்திய அமெரிக்கர் பெயர்

news-image

ஹூஸ்டன்:அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட உள்ள துவக்கப்பள்ளி ஒன்றுக்கு, மறைந்த சமூக சேவகரும், இந்திய அமெரிக்கருமான சோனால் புச்சர் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சோனால் புச்சர். 'பிசியோ தெரப்பி'யில் பட்டம் பெற்ற சோனால், திருமணத்துக்கு பின், 1984ல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டனில் குடியேறினார்.சமூக சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த சோனால், பள்ளி மாணவ - மாணவியர் நலனில் மிகவும் அக்கறை செலுத்தினார்.ஹூஸ்டனில் கல்வி மேம்பாடு தொடர்பாக, பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார்.

படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு, ஊக்கத் தொகை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சோனால் புச்சர், கடந்த, 2019ல், தன், 58 வயதில் இறந்தார்.இந்நிலையில், ஹூஸ்டனில், 2023ல் திறக்கப்பட உள்ள துவக்கப்பள்ளி ஒன்றுக்கு, சோனாலி புச்சர் பெயரை வைக்க, ஹூஸ்டனில் உள்ள, 'தி போர்ட் பிளண்ட் இண்டிபெண்டன்ட் ஸ்கூல் டிஸ்டிரிக்ட்' அறக்கட்டளை நிர்வாகிகள், ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.