Goldstars News
பிரதான செய்திகள்

குடியுரிமை மசோதா பைடன் அறிமுகம்

news-image

வாஷிங்டன்:அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, 'எச் - 1பி' விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விசா வாயிலாக, அதிக அளவிலான இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எச் - 1பி விசா பெறுவதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.இந்நிலையில், டிரம்பின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவராக கருதப்படும், தற்போதைய அதிபர் ஜோ பைடன், அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக, குடியுரிமை சட்ட மசோதாவை, நேற்று முன்தினம், அறிமுகம் செய்தார்.

இந்த, 2021ம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமை சட்ட மசோதா, அமெரிக்காவில், ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், 1.1 கோடி பேருக்கு, குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. மேலும், 'கிரீன் கார்டு' பெறுவதற்கு இருந்த வரம்பு நீக்கப்பட உள்ளது. இதைத்தவிர, எச் - 1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகளுக்கும், வேலை வாய்ப்பு அங்கீகாரம் வழங்கப்படும்.

ஈரானுடன் பேச்சு நடத்தஅமெரிக்கா விருப்பம்

வாஷிங்டன்: கடந்த, 2015ம் ஆண்டு, அணுசக்தி ஒப்பநதம், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், ஈரான், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. இது, ஈரான் அணுசக்தி திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. உலக சமாதானத்துக்காக, அணு ஆயுத சோதனைகளை தடுக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் இருந்து, 2018 ஆம் ஆண்டு, முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விலகியது.கடந்த மாதம், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:ஈரான் அணுசக்தி திட்டத்தில் இணைவது குறித்து, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்த, அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக, ஐரோப்பிய யூனியன் அழைப்பு விடுத்தால், அதை அமெரிக்கா உடனடியாக ஏற்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.