Goldstars News
பிரதான செய்திகள்

ஐ.நா., செயலராக இந்தியர் நியமனம்

news-image

நியூயார்க்: ஐ.நா., வளர்ச்சி திட்டப் பிரிவின் நேர் உதவிச் செயலராக, இந்தியாவைச் சேர்ந்த, உஷா ராவ் மோனரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியா குட்டரஸ் பிறப்பித்துள்ளார். ஐ.நா., வளர்ச்சி திட்டப் பிரிவு, உலகின் பல்வேறு நாடுகளில், ஐ.நா., நிதியுதவியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
 
'பிளாக்ஸ்டோன் இன்ப்ராஸ்ட்ரக்சர்' குழுமத்தின் மூத்த ஆலோசகராக உள்ள, உஷா ராவ் மோனரி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அடிப்படை கட்டமைப்பு துறை முதலீடுகளில் அனுபவம் பெற்றவர்.இதுவரை இல்லாத வகையில், ஐ.நா.,வின் முக்கிய பொறுப்புகளில், உஷா ராவ் மோனரி உட்பட, ஏராளமான பெண்கள் இடம் பெற்று வருகின்றனர்.