Goldstars News
பிரதான செய்திகள்

ஐ.நா., இந்தியாவுக்கு நன்றி

news-image

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 'ஐ.நா., அமைதி படையினருக்கு, இந்தியா, இரண்டு லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்கும்' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். இதற்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியா குட்டரஸ் நன்றி தெரிவித்துஉள்ளார்.

இந்தியா அறிவித்துள்ள இலவச தடுப்பூசி மருந்து, உலகம் முழுதும், 12 பகுதிகளில் பணியாற்றும், ஐ.நா., அமைதிப் படையைச் சேர்ந்த, 94 ஆயிரத்து, 484 பேருக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் என, அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளில், ஐ.நா., அமைதிப் படையினர், மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 121 நாடுகள், இந்த அமைதிப் படைக்கு ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளன. அவற்றில், இந்தியா மிக அதிகமான ராணுவ வீரர்களை அனுப்பி, முதலிடத்தில் உள்ளது.