Goldstars News
பிரதான செய்திகள்

100 இளம் தலைவர்களில் 6 இந்தியர்

news-image

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ், எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய, 100 வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு இந்தியர் மற்றும் ஐந்து இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திர சேகர ஆசாத், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர். இவரைத் தவிர, ஐந்து இந்திய வம்சாவளியினர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் வழக்கறிஞர் விஜய் கட்டே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நிதி அமைச்சர் ரிஷி சுனாக், 'இன்ஸ்டாகார்ட்' நிறுவனர் அபூர்வா மேத்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

டாக்டரும், அரசு சாரா அமைப்பான, கெட் அஸ் பி.பி.இ., செயல் இயக்குனருமான ஷிகா குப்தா; அரசு சாரா அமைப்பான, 'அப்சால்வ்' நிறுவனர், ரோஹன் பவுலுரி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.