Goldstars News
பிரதான செய்திகள்

குவியும் கண்டனங்கள் - விநாயகரை அவமதித்த பாப் பாடகி ரைஹனா

news-image

அமெரிக்க பாப் பாடகி ரைஹனா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலாடை இல்லாமல் கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்து அவர் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இது அவரது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரைஹனா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சமூக விஷயங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். இதனால் நடிகை மற்றும் பாப் பாடகி என்ற அடையாளத்தையும் மீறி அவருக்கு சமூக ஆர்வலர் என்ற பட்டமும் கிடைத்தது. சமீபத்தில் டில்லியில் போராடி வந்த விவசாயிகள் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களை அவர் பதிவிட்டது வைரலாகியது.

இந்தியாவில் அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருங்கே கிடைத்தன. இதனைத் தொடர்ந்து ரைஹானா தனது இன்ஸ்டா பக்கத்தில் மேலாடை இன்றி கழுத்தில் கணேசா டாலர் கொண்ட செயின் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இது பாஜகவினர் மற்றும் இதர இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரைஹானாவின் இன்ஸ்டா பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்து தெய்வங்களை அவமதிக்கும் விதமாக அவர் இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.