Goldstars News
பிரதான செய்திகள்

சீனாவுடன் அணுக்கமாகச் செல்லும் ஜோ பைடன்?

news-image

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏழு நாடுகளுடன் வெர்ச்சுவல் ரியாலிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார். ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கையாள பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 லட்சம்பேர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மரணம் அடைந்துள்ள நிலையில் ஜோ பைடன் தடுப்பு மருந்து விநியோகத்தை துரிதப்படுத்தினார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேறு நாடுகளுடன் இந்த முக்கிய கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
1.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் நிதியை கொரோனா நிவாரணத்திற்கு வழங்க ஏற்கனவே அமெரிக்கா காங்கிரஸிடம் ஜோ பைடன் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் முன்னதாக சீனாவின் பொருட்களுக்கு அதிக வரி விதித்து வர்த்தகப் போரைத் துவக்கி வைத்து இருந்தார். இது அப்போது கடும் விமர்சனத்தை பெற்றிருந்தது. இதுகுறித்து இந்த ஜி7 வெர்ச்சுவல் கூட்டத்தில் ஜோ பைடன் பேச உள்ளார்.

உலக அளவில் பல நாடுகளின் முதலீடுகளை அதிகரித்து சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற டொனால்டு டிரம்பின் கொள்கையை உடைத்து குடியேறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜனநாயக அதிபர் ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை காட்டிலும் சீனாவுடன் சற்று அணுக்கமாக சென்று வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.