Goldstars News
பிரதான செய்திகள்

ரிக்டரில் 7 ஆக பதிவு - ஜப்பானில் நிலநடுக்கம்

news-image

டோக்கியோ: ஜப்பானில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது


இது குறித்து கூறப்படுவதாவது: ஜப்பான்நாட்டின் நமீ நகரின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு ஆனது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சேதமதிப்பு குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை . சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.

ஜப்பான் நாட்டின் டோஹோகு பகுதியில் மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களை நிலநடுக்கம் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் புகுஷிமா கோரியாமா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு புத்தக அலமாரி கீழே விழுந்துள்ளது.