Goldstars News
பிரதான செய்திகள்

அமெரிக்க அதிபர் கவலை - சீனாவின் போக்கு

news-image

வாஷிங்டன்: சீனாவின் மிரட்டல் போக்கு, நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை குறித்து, அந்நாட்டு அதிபர், ஜிங்பிங்கிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலர் ஜென் பெசக்கி கூறியதாவது:‛ஜோ பைடன் பதவியேற்ற பின், முதன்முறையாக நேற்று ஜிங்பிங்கை தொடர்பு கொண்டார். சீனாவின் ஏகாதிபத்திய முயற்சி, மிரட்டல் போக்கு, நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகள், தைவான் விவகாரம், ஹாங்காங் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, ஜோ பைடன், ஜிங்பிங்கிடம் பேசினார்.' இவ்வாறு, அவர் கூறினார்.

அதிபர் ஜோ பைடன், அமெரிக்க ராணுவ அதிகாரி எலி ரட்னர் தலைமையில், சீன அதிரடி படை என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளார். இது, சீனாவின் செயல்பாடுகளை கண்காணித்து, விபரங்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு வழங்கும். என்பது குறிப்பிடத்தக்கது.