Goldstars News
பிரதான செய்திகள்

இந்திய பெண் போட்டி - ஐ.நா., பொதுச் செயலர் பதவி

news-image

நியூயார்க்:ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு, இந்தியாவில் பிறந்து, கனடாவில் வசிக்கும், அரேரா அகன் ஷா, 34, போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.கடந்த, 2017ல், ஐ.நா., பொதுச் செயலராக, ஆன்டோனியோ குட்டரஸ் பதவியேற்றார். இவரது பதவிக் காலம், இந்தாண்டு டிச., 31ல் முடிவடைகிறது. அவர், மீண்டும் பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா., வளர்ச்சித் திட்ட கணக்கு தணிக்கை அமைப்பாளரான அரோரா அகன் ஷா, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில், 'வீடியோ' பிரசாரத்தையும் துவக்கி விட்டார். அதில் என்னைப் போன்ற பெண்கள், அதிகாரமிக்க தலைமை பொறுப்பிற்கு வருவதில்லை. தங்களுக்கான காலம் வரும் வரை காத்திருக்கின்றனர்.

அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதை நிறுத்தி விட்டு, மக்களுக்கு சேவையாற்றும் நேரம், ஐ.நா.,வுக்கு வந்து விட்டது. அதை முன்னின்று செய்யவே, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.