Goldstars News
பிரதான செய்திகள்

இந்தியா - அமெரிக்கா ராணுவ வர்த்தகத்தில் புதிய உச்சம்

news-image

வாஷிங்டன்:இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்புதொடர்பான பரஸ்பரவர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவம் தொடர்பான பரஸ்பர வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்காவிற்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர வர்த்தகம் வரலாறு காணாத அளவுக்கு 1.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. கடந்த 2018 முதல் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களைஇறக்குமதி செய்துள்ளது.

இரு நாடுகளின் ராணுவத்திற்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்கா அதன் முக்கிய ராணுவ கூட்டுறவு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கிஉள்ளது.ராணுவம் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான நல்லுறவு இதுவரை இல்லாத வகையில் வலுவடைந்து உள்ளது.

அமெரிக்கா சமீபத்தில் இந்தியா ஜப்பான்ஆஸ்திரேலிய நாடுகளுடன் இணைந்து 'மலபார் போர் பயிற்சி' நடத்தியது குறிப்பிடத்தக்கது.அடுத்த தலைமுறைக்கான ராணுவ தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தயாரிப்பு கண்டுபிடிப்பு புதிய துறைகளில் பரிசோதனை மேற்கொள்வது போன்றவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு இரு நாடுகளும் இணைந்து பாடுபட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.