Goldstars News
பிரதான செய்திகள்

மைனஸ் 23 டிகிரியாக பதிவு - கடும் குளிரால் நடுங்கும் பிரிட்டன்

news-image

லண்டன்: பிரிட்டனில் வரலாறு காணாத குளிர் நிலவுகிறது. சில பகுதிகளில் மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பிரிட்டனில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. அங்கு குறிப்பாக லண்டன், பெரமர், அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் உறைபனி போன்ற குளிர் பிரதேசமாக மாறியுள்ளது. அங்கு மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 9.4 பாரன்ஹீட்) என்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், லண்டனை அடுத்துள்ள கென்ட் மற்றும் டோவர் பகுதிகளில் மைனஸ் 20 டிகிரி குளிர் நிலவுவதால், நூற்றுக்கணக்கான வாகன ஊர்திகள் பனியில் மாட்டிக்கொண்டுள்ளன.

இந்த கடும் குளிர் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது லண்டனில் பதிவாகியுள்ள மைனஸ் 23 டிகிரி குளிரானது 1995ம் ஆண்டுக்கு பின் அதிகளவு குளிரை பதிவாகியுள்ளது. மேலும், 1955ம் ஆண்டு நிலவிய குளிருக்கு இணையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.