Goldstars News
பிரதான செய்திகள்

41 நாடுகளில் பரவியுள்ள தென் ஆப்ரிக்க கொரோனா வைரஸ்..!

news-image

உருமாற்றம் பெற்ற தென் ஆப்பிரிக்க கொரோனா வைரஸ் சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இது எதனால் ஆபத்தானது என்று விரிவாகப் பார்ப்போம்.கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி ஐநா சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தென்னாப்பிரிக்காவின் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் 47 நாடுகளை தாக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த வைரசுக்கு பெயர் பி-1351.
கடந்த அக்டோபர் மாதம் 2020ஆம் ஆண்டு இந்த வித வைரஸ் பரவத்துவங்கியது. டிசம்பர் 23-ஆம் தேதி பிரிட்டனில் இந்த வைரஸ் இருவரைத் தாக்கியது. இதன்மூலமாக வெளிநாடுகளுக்கு இந்த வைரஸ் பரவத் துவங்கியது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி இந்த வைரஸ் மேலும் 10 நாடுகளுக்குப் பரவி தற்போது 41 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் இதன் பரவும் விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்து உருமாற்றம் பெற்ற தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸை அழிக்க வல்லது என்று முன்னதாக தகவலை வெளியிட்டது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குப்பிகளை குளிர் நிலையில் பயன்படுத்துவது பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் சாத்தியமற்றது.
இதற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆப்பிரிக்க நாடுகள் பல, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டன. பிரிட்டனின் தடுப்பு மருந்தான ஆஸ்ட்ராசெனேகா இந்த வகை வைரசை 90% போக்கியது என அந்நிறுவனம் முன்னதாக தகவல் அளித்தது. ஆனால் இதற்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க உருமாற்றம் பெற்ற வைரஸின் பரவும் வேகம் அதிகம் என்பதைத் தவிர இதன் வீரியம் சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் அதிகம் என்பதற்கு எந்த மருத்துவச் சான்றோ, ஆராய்ச்சி முடிவுகளோ இன்றுவரை இல்லை என்பது ஆறுதலான விஷயம்.