Goldstars News
பிரதான செய்திகள்

அன்று இதே நாளில்

news-image

டிச., 27, 2007

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சுல்பிக்கர் அலி புட்டோவின் மகளாக, 1953 ஜூன், 21ல் பிறந்தவர், பெனாசிர் புட்டோ. தன், 24 வயதில், 'பாகிஸ்தான் மக்கள் கட்சி' தலைவர் பொறுப்பை ஏற்றார். தந்தையின் மறைவுக்கு பின், அரசியலில் களமிறங்கியவர், தன், 35வது வயதில், பாக்., பிரதமரானார்.ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 20 மாதங்களுக்குள், அப்போதைய அதிபர், குலாம் இசாக் கானின் உத்தரவால், பெனாசிர் பதவி நீக்கப்பட்டார்.பின், 1993ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, 1996ல் நீக்கப்பட்டார். 1998ல், துபாய் சென்றார். மீண்டும் பாகிஸ்தானுக்கு, 2007ல் திரும்பினார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 2007 டிச., 27ல் நடந்த வெடிகுண்டு தாக்குதலில், தன், 54வது வயதில் கொல்லப்பட்டார்.
பெனாசிர் புட்டோ காலமான தினம் இன்று!