Goldstars News
பிரதான செய்திகள்

புடின் - ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும்

news-image

மாஸ்கோ: ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அந்நாட்டின் உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ‛ஸ்புட்னிக்-வி' என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை கடந்த ஆகஸ்டு மாதம் பதிவு செய்து தற்போது உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தது. மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா தனது இரண்டாவது தடுப்பூசியையும் கண்டறிந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வெக்டர் மையத்தின் கொரோனா தடுப்பூசியான ‛எபிவாக்கொரோனா' ரஷ்யாவின் இரண்டாவது தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி பதிவை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியது. இந்நிலையில், ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில்;
‛ரஷ்யாவின் சுகாதார அமைப்பு, இப்போது கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது,' என்றார்.