Goldstars News
பிரதான செய்திகள்

1,000 செவிலியர்கள் உயிரிழப்பு - கொரோனா

news-image

ஜெனிவா: 'கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை, 1,000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள்' என, செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச செவிலியர் அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் பாதிப்பு அதிகரிக்கிறது.பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை அளிப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், உலக முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1,000 செவிலியர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளது.