Goldstars News
பிரதான செய்திகள்

புடின் பச்சாதாபம் - அமெரிக்கா போராடுது

news-image

மாஸ்கோ: கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், அமெரிக்கா போராடுவதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, ரஷ்யா வெளியேறி வருவதாகவும், அமெரிக்கா போராடுவதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, நேற்று முன்தினம் அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பில் இருந்து வெளியேற, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுப்பதால், எங்கள் நாட்டில், இழப்புகள் குறைவாக உள்ளன. இங்கே, மத்திய அரசுடன், அனைத்து மாகாண அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில் இது போன்ற நிலை இல்லை. அங்குள்ள மாகாண அரசுகள், ஒருங்கிணைப்பின்றி உடைந்து கிடக்கின்றன. இதனால், பாதிப்பை தடுக்க, கடுமையாக போராடும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.